Tuesday, September 19, 2006

ஒரு கிளாஸ் மனிதநேயம் ப்ளீஸ்

அன்புள்ள நண்பர்களே ,


கடந்த சில நாட்களாக 3 வயது பெண்குழந்தை ஷைரீன் பானு Beta Thalassemia Major என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். 21 நாளுக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்கவில்லையெனறால் இந்தக் குழந்தை இறந்துவிடக் கூடும். இதற்கு hormone transplanting என்ற முறையில் தான் bone marrow transplantation ஆபரேஷன் செய்யமுடியும்.

இந்த transplanting சிகிச்சைக்கு ஷைரீன் பானுவின் சகோதரியான 6 வயதான அப்ரீன் பானு என்ற குழந்தையை வைத்து அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு 9 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்தச் சிறுமியின் குடும்பத்திற்கு அமைதி கொடுப்பதற்காக கேரளாவைச் சார்ந்த கோபகுமார் என்ற சகோதரர் நிதி திரட்டி ஆபரேஷனுக்குண்டான செலவை ஈடுகட்ட முன்வந்துள்ளார். பாருங்களேன் மதம் தாண்டி , மொழி தாண்டி, நாடு தாண்டி, யாரோ ஒருவருக்காக யாரோ செய்கின்ற இதுபோன்ற உதவிகளினால்தான் மனிதநேயத்தினால்தான் இன்னமும் பூமி அழியாமல் இருக்கின்றது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். ஆனால் ஏழையின் சோகத்தில்?

சிறுமியின் ஷைரீன் பானு தந்தையான ஜமால் அவர்களின் வேண்டுகோள் கடிதம் இது:

சகோதரர் ஜமால்முஹமது எழுதிக்கொண்ட மடல் உங்கள் பார்வைக்கு..

====

அன்புள்ள சகோதரர்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜமால்முஹம்மது ஆகிய நான் எழுதிக்கொள்ளும் ,

நான் ரியாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிகிறேன் எனது ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி ஆகும் மூன்று வயதே நிரம்பிய எனது இளையமகள் ஷைரீன் பானு Beta Thalassemia Major என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளாள், உடம்பில் இரத்தம் ஊராத காரணத்தால் 21 நாளுக்கு ஒரு முறை இரத்தம் செலுத்த வேண்டும், இரத்தம் செலுத்த தாமதமானால் உடம்பு வெளுத்துவிடும், கடுமையான காய்ச்சல் வரும். இப்படியான நிலையில் பிறந்ததில் இருந்தே கடந்த மூன்று வருடங்களாக இரத்தம் ஏற்றிக்கொண்டுள்ளோம்.

டாக்டர்கள் என் மகளுக்கு உடன் bone marrow transplantation ஆப்ரேசன் செய்யும்படி கூறுகிறார்கள், அது hormone transplanting முறையில்தான் செய்யமுடியுமாம்.


அதற்கு 6 வயதான என் மகள் அப்ரின் பானு மூலம் செய்ய எண்ணியுள்ளோம். இதற்குண்டான செலவுகள் சுமார் 9 லட்சம் வரும் என்று கூறியுள்ளார்கள்,

என் பிஞ்சு மகள் படும் வேதனையை சகிக்க முடியாமல் உங்களைப் போன்ற அன்பு சகோதரர்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன், கேரளாவைச் சேர்ந்த கோபகுமார் என்ற சகோதரர் எங்கள் நிலை கண்டு மனமிரங்கி எங்களுக்காக உங்களிடம் வசூல்செய்துதர சம்மதித்துள்ளார் அவர் மாறலோ அல்லது கீழ்க்கண்ட முகவரியிலோ எங்களுக்கு உதவி செய்து என் மகள் படும் சிரமத்தை களைய உதவி செய்ய வேண்டுமாய் உங்களிடம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்...

அன்புடன்

G. ஜமால்

Jamal Mohiyuddin - Father of Shareen BanuStudio Five Stars,
Professional Photo & Digital
Riyadh - Malaz - Mashreef Street
Tel - 479 2640 Fax - 477 6403, Mobile # 0567 420 490


Home Address;

J.M. Fathima, No. 28-A, Pudukudi West Street,
Eruvadi - 627 103, Tirunelveli District, Tamil Nadu
Contact Details;
Tel - 0091 4637 240 399
Tel - 0091 9360 319 915 Mr. Qadar Mastan - For English Speaking


Bank Details;

Name:
J.M. Fathima, Bank: Canara Bank, Branch: Eruvadi, A/c: 17494


(If anyone transfer money to account directly, please let me know, this is for record purpose only)

Address in Saudi Arabia;

Shareen Banu Collection Committee -


Contact Numbers :

Jeddah - Jimmy John - 0564 121 379, email - jimmyjohn@sara. com.sa
Khobar - Mehboob Khadir 0564 136 822, email - mahboobk@sara. com.sa
Qassim - Aslam 0506 141 650, email - aslamgm@yahoo. com
UAE - Prashanth 0508 423 439, email - prasanthk15@ yahoo.com
For Riyadh area
- you can contact Gopa Kumar - 0507 169 705 / mgopa@sara.com. sa


TAFAREG என்ற யாகு குழுமத்தினர் அந்த சிறுமியின் குடும்பம் உண்மையில் வறுமையில்தான் வாடுகின்றதா என்று தீர விசாரித்து அது மிகவும் ஏழைக்குடும்பம்தான் என்று தீர விசாரித்தப் பிறகு தங்கள் குழுமத்தில் உள்ளவர்களிடமிருந்து வசூல் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் மனிதநேயச்செயலுக்காப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் படங்களை உங்களின் கருணை மனதிலிருந்து ஈரம் கசிவதற்காக இங்கே வெளியிடுகின்றேன்.பாருங்கள் இதோ :


பெயரில் கோபம் இருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு அமைதியை கொடுப்பதற்கு முயலும் கோபக்குமாருக்கும் மற்றும் TAFAREG என்ற யாகு குழுமத்திற்கும் மற்றும் உதவ முன்வரப்போகின்ற அத்தனை சகோதரர்களுக்கும் உலகில் உள்ள அத்துணை மனிதர்கள் சார்பில் பாராட்டுக்கள்.

ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால்
மரணித்தப் பிறகும் மணத்தோடு வாழலாம்


வேண்டுகோளுடன்,

-ரசிகவ் ஞானியார்

10 Comments:

said...

உங்கள் ஒரு விதை சிறு செடியை பிரசவித்தது இன்று

5:40 PM  
said...

உங்களின் ஒரு விதை சிறுசெடியை பிரசவித்தது இன்று!

5:41 PM  
said...

ஞானியார் அவர்களே!
உங்களது கவிதைகளை மிகவும் விரும்பி ரசித்துப் படிக்கும் ரசிகர்களில் ஒருவன் நான், உங்கள் கவிதைகளை ரியாத் தமிழ் சங்கத்திலும் பலதடவி வெளியிட்டுள்ளோம், நீங்கள் எங்கள் குழுமத்தில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி...

உங்களின் ஊக்கமும், பாராட்டுதலும் எங்களை மென்மேலும் சமுதாயப்பணி செய்யத் தூண்டும் என்பதில் மகிழ்ச்சியே!

எங்களின் பணியில் இதுவரி 6700 ரியால் வசூலித்துள்ளோம் என்பதும் அது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
அஹமது இம்தியாஸ்
தலைவர் - தபர்ரஜ்

6:01 PM  
said...

ஞானியார் அவர்களே!

உங்களது கவிதைகளை மிகவும் விரும்பி ரசித்துப் படிக்கும் ரசிகர்களில் ஒருவன் நான், உங்கள் கவிதைகளை ரியாத் தமிழ் சங்கத்திலும் பலதடவி வெளியிட்டுள்ளோம், நீங்கள் எங்கள் குழுமத்தில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி...

உங்களின் ஊக்கமும், பாராட்டுதலும் எங்களை மென்மேலும் சமுதாயப்பணி செய்யத் தூண்டும் என்பதில் மகிழ்ச்சியே!

எங்களின் பணியில் இதுவரை 6700 ரியால் வசூலித்துள்ளோம் என்பதும் அது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
அஹமது இம்தியாஸ்
தலைவர் - தபர்ரஜ்

6:02 PM  
said...

ஞானியார் அவர்களே!

உங்களது கவிதைகளை மிகவும் விரும்பி ரசித்துப் படிக்கும் ரசிகர்களில் ஒருவன் நான், உங்கள் கவிதைகளை ரியாத் தமிழ் சங்கத்திலும் பலதடவி வெளியிட்டுள்ளோம், நீங்கள் எங்கள் குழுமத்தில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி...

உங்களின் ஊக்கமும், பாராட்டுதலும் எங்களை மென்மேலும் சமுதாயப்பணி செய்யத் தூண்டும் என்பதில் மகிழ்ச்சியே!

எங்களின் பணியில் இதுவரை 6700 ரியால் வசூலித்துள்ளோம் என்பதும் அது இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
அஹமது இம்தியாஸ்
தலைவர் - தபர்ரஜ்

6:04 PM  
said...

//eruvadi sulthan said...
உங்களின் ஒரு விதை சிறுசெடியை பிரசவித்தது இன்று! //

நன்றி சுல்தான்.
அந்தச் செடி மேலும் வளர்ந்து பூக்கள் பூக்க அனைவரின் ஆசிர்வாதங்களும் தேவை.

10:41 AM  
said...

//Imthias: உங்களின் ஊக்கமும், பாராட்டுதலும் எங்களை மென்மேலும் சமுதாயப்பணி செய்யத் தூண்டும் என்பதில் மகிழ்ச்சியே!//

இறைவனின் கருணை என்றும் உங்களுக்கும் ,
உதவுகின்ற குழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கட்டும்

10:43 AM  
said...

உங்கள் அனைவரின் ஊக்குவிப்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு நம் சகோதரர்கள் ஒரு வாரத்தில் 9200 ரியால் உதவியிருப்பது மனித நேயம் உலகில் மலிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி...

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் பெயரில் கோபத்தை கொண்டிருக்கும் கோபக்குமார் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு தமிழரின் கஷ்டத்திற்கு தோல்கொடுக்கிறார் என்பதும் இந்தியர்களாகிய நம் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு...

என்றும் அன்புடன்,
இம்தியாஸ்

5:16 PM  
said...

அன்புள்ள ரசிகவ்,
உங்கள் மனிதநேய 'விதைகள்' விருட்சமாக வளர வாழ்த்துகிறேன்.
இங்கு வலைப்பூவுலகில் உலவும் அனைவருக்கும் தங்களுடைய இந்தப் பதிவை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

4:53 PM  
said...

அல்லாஹ்வின் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் இருப்பதாக தகவல், அல்ஹம்துலில்லாஹ்

1:15 PM  

Post a Comment

<< Home