Sunday, April 16, 2006

மனிதர்களாய் கூடுவோம்





உலகத்தில் சாதாரண மனிதர்களாய் எங்கோ ஒரு மூலையில் பிறந்து வளர்ந்து மரணப்பட்டுப் போகின்றோம். நம் மரணித்துடனையே நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் யாருக்கும் பயன்பெறாமலையே முடிந்துபோகின்றது. இப்படியொருவன் உலகத்தின் இந்த மூலையில் பிறந்து வளர்ந்ததே எவருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது.

நாம் மரணித்த உடனையே வெறும் பலகையில் தோற்றம் - மறைவு என்று எழுதி வைத்திருக்க வேண்டியதுதான். நாம் புதையுண்ட இடத்தை கடந்து செல்பவர்களுக்கோ அல்லது அந்த பலகையை காண்பவர்களுக்கோ நம்மை நினைத்து பார்த்துவிட்டு கடந்து சென்று விடுவர்.

யாருக்கும் பயன் பெறாமலையே வாழ்ந்து - மரணித்து போவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

எங்கோ ஒரு சாலையில் விதையை புதைத்துவிட்டுச் செல்பவன் தன் மரணித்த பிறகும் இளைப்பாற வருபவர்களுக்கெல்லாம் நிழல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான்.

சில விலங்குகள் கூட தான் இறந்து போன பிறகு மனிதனுக்கு தோல்களாகி பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. சில உயிரினங்கள் மரணித்தபிறகு உரமாகப் பயன்படுகின்றது. சில உயிரினங்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இப்படி மிருகங்களுக்கு கூட பயனுள்ள வாழ்க்கையாக அமைந்துவிடுகின்றது.

ஆனால் மனிதன் இறந்து போன பிறகு அதிக நேரம் பூமியில் வைத்திருந்தால் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுவான். அவனை எதற்கும் பயன்படுத்த முடியாது.

அவன் எங்கோ யாருக்கோ செய்கின்ற உதவிகள் - கருணைகள் அவனை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும்.

இறைவன் எல்லாரையும் பணம் உள்ளவர்களாக படைத்துவிட்டால் சமநிலையாக இருக்காது என்றுதான் ஏழைகளையும் படைத்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக பணம் உள்ளவர்களையும் படைத்துள்ளான்.

தங்களைப் போன்றவர்களின் சிறு உதவி ஒரு உயிரைக் காப்பாற்றலாம். உயிரைக்கொடுக்கும் பொறுப்பும் எடுக்கும் பொறுப்பும் இறைவனின் கைகளில் ஆனால் காப்பாற்றும் பொறுப்பை நமக்கு கொடுத்துள்ளான்.

ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால்
மரணித்தப் பிறகும் மணத்தோடு வீசலாம்





என்றும் அன்புடன்

ரசிகவ் ஞானியார்

4 Comments:

said...

வாங்க..வாங்க.. புது வடிவத்தில்... கலக்குங்க...

3:04 PM  
said...

அன்பின் பாலபாரதி..

தங்களின் உற்சாகத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி

3:10 PM  
said...

Testing

6:54 PM  
said...

Ennakullum vidhaikapatu vittana...

Vaazhthukkal

Dravidan

5:36 AM  

Post a Comment

<< Home