Monday, September 24, 2007

ஒரு அம்மாவைக் காப்பாற்றுங்கள் மகன்களே

அன்புடைய நண்பர்களே ,

நேஷனல் பொறியியல் கல்லூரியில் ( National Engineering College - 2005 Batch ) CSE பிரிவில் படிக்கின்ற மாணவி ராமலெஷ்மியின் தாயார் லதா இளையபெருமாள் அவர்கள் BRAIN TUMOR நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்கள். அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவர்களுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 45 நாட்களாக மயக்க நிலையிலையே செய்றகை சுவாசம் செலுத்தப்பட்டு உள்ளார்கள்

அவர்கள் குடும்பத்தினர் ஏற்கனவே 10 லட்சம் வரையிலும் செலவு செய்துவிட்டனர். இனிமேல் செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி அவர்களை மீட்க இன்னமும் 3 அல்லது 4 லட்சம் தேவைப்படுகின்றது.

இறைவன் அந்தச் சகோதரியின் தாயாரை தங்கள் மூலம் காப்பாற்ற நாடியிருக்கின்றானோ என்னவோ? ஆகவே தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒருவருக்கு நேர்ந்த துன்பம்போல இதனை நினைத்துக் கொண்டு உதவுங்களேன் நண்பர்களே

யாரோ எங்கோ மருத்துமனையில் படுகின்ற கஷ்டத்திற்கு நாம் ஏன் உதவ வேண்டும் என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் நண்பர்களே.
ஒரு அம்மாவைக் காப்பாற்றுங்கள். உலகின் எந்த உறவுக்கும் ஈடாக இன்னொரு உறவினைக் கூறிவிடலாம் அம்மாவைத் தவிர.

சுயநலமில்லா பாசம் காட்டுவது உலகத்தில் பெற்ற தாய் மட்டும்தான். மீண்டும் அந்தத் தயார் அந்தச் சகோதரியை, காலையில் டிபன் செய்து சிங்காரித்து அனுப்பும் வசந்த நாட்களை மீட்டுக் கொடுங்கள் நண்பர்களே.

இதோ அந்த மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் :

Photo Sharing and Video Hosting at Photobucket



ராமலஷ்மியின் HDFC வங்கி எண் : 3231140004062 - மயிலாப்பூர் கிளை



நான் மட்டுமல்ல
எந்தக் குழந்தையும்
உனக்கு குழந்தையாகிவிட முடியும்.

ஆனால்
உன்னைத் தவிர
எந்த அம்மாவும்
எனக்கு அம்மாவாகிவிட முடியாது



ஒரு அம்மாவிற்காக மகன்,

ரசிகவ் ஞானியார்

Wednesday, September 19, 2007

இந்தப் பெண்ணுக்கு உதவுங்களேன்.

நண்பர் ஹரிஹரனின் வலைப்பதில் உள்ள வேண்டுகோளினை இங்கே மீள் பதிவாக இடுகின்றேன். சாஃப்ட்வேர் நண்பர்களே தயவுசெய்து உதவுங்களேன்.

இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.

குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.

அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.

இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.

05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.

தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.

மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.

- ஹரிஹரன்

வேண்டுகோளுடன்

ரசிகவ் ஞானியார்