Sunday, April 23, 2006

உங்களோடு ஒரு நிமிடம்




அப்ஹையா டீம் சர்வீஸ்.. - சென்னை
[ ABHAYA TEAM SERVICE - CHENNAI ]

நமது வெற்றிக்குப் பின்னால் சிலர் இருந்திருக்கின்றார்கள்
சிலரது உயர்வுக்காகவாவது நாம் உதவியாக இருப்போம்


இங்கே கஞ்சிக்கே வழியில்லாமல் காரணம் யாதென்று அறிய முடியாமல் கள்ளமில்லாத குழந்தைகள்.

இதோ சத்துணவிற்காக காத்துநிற்கும் இந்த சிறிய மொட்டுக்கள் சானியா போன்ற சாதனை நாயகியாய் வருவதற்கு சாத்தியமா? சாத்தியமே நாம் கரம் சேர்த்தால்

நம்மில் பலர் படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்லவேண்டுமென்ற நிலையில் வறுமை ஒருபுறம் வாட்டியெடுக்கும். வாலிபம் ஒருபுறம் விரட்டும். இப்படி சோத்துக்குப் போராடி சோதனைகள் பல தாண்டி வேலை செய்து கொண்டே படிப்பை தொடரவேண்டிய நிலையில் உள்ளோம்.

இதுபோன்ற ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி அளித்து அதன் மூலம் வருகின்ற வருமானத்தைக் கொண்டு அவர்கள் படிப்புச் செலவை அவர்களே பார்த்துக்கொள்ளுமாறு வசதி அளித்து வருகிறோம்.


இதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கும் ABHAYA TEAM SERVICE ( ATS )- Chennai , உங்களிடம் கேட்பது பண உதவி அல்ல அதற்குப் பதிலாக உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ கம்ப்யூட்டர் சர்வீஸ் தேவைப்படும்பொழுது உங்கள் சகோதரர்களாக நினைத்து எங்களிடம் உள்ள திறமையான மாணவர்களை பயன்படுத்தி உதவ வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

இதுபோன்ற பல இளைஞர்களின் வாழ்க்கையையும் பல குழந்தைகளின் வாழ்க்கையைம் மேம்படுத்த இந்த மடலை சென்னையில் உள்ள அனைத்து ஐடி துறையைச் சார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் தெரிவியுங்கள் நண்பர்களே

நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய எண்கள்

98401 46764
32975776


Abhaya Team Service
8/10 Garani Garden
ist Street, Saidapet – Chennai


abhaya@googlegroups.com

( இத்தகவலை மின்னஞ்சல் அனுப்பிய நிலா ரசிகனுக்கு நன்றி )

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Thursday, April 20, 2006

இரத்தம் கொடுங்க அண்ணா..



அன்புள்ள கொண்டவர்களுக்கு



இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது பெண்குழந்தை ஒன்று அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியுட்டில் ( Adayar Cancer Institute- Chennai ) அனுமதிக்கபப்ட்டுள்ளது

அந்தக்குழந்தைக்கு அவசரமாக A- , A1- & A2- இரத்தவகைகள் அதிகமாக தேவைப்படுவதால் உடனடியாக அந்த வகை இரத்தம் உடையவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் உறவினர்கள் - நண்பர்கள் மற்றும் சென்னையில் தங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இத்தகவலை அனுப்புங்களேன்.

"அட இதுமாதிரி தகவல்கள் நிறைய வருகின்றது..அப்புறம் பார்த்துகலாம்பா" என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் . தயவுசெய்து தங்கள் வீட்டு குழந்தை ஒன்று இப்படி நேர்ந்தால் எந்த அளவிற்கு துடித்துப் போவீர்களோ..பரபரப்பாய் இரத்தம் கிடைப்பதற்காக தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைப்பீர்களோ.. அதுமாதிரி இந்தக்குழந்தைக்கும் உதவுங்கள் நண்பர்களே..

இதைப்படிக்கின்ற யாரேனும் ஒருவர் ஒரு நபருக்கு தொலைபேசி செய்தாலோ அல்லது மெயில் அனுப்பினாலோ கூட போதும். ஒரு விநாடி ஒதுங்குங்களேன்..

வாடகைவீடாம் பூமியிலே
மனிதநேயம் ஒரு கதவு
பாடையிலே நீ போகுமுன்னே
பத்துப் பேருக்கு நீ உதவு


அணுக வேண்டிய முகவரி :

00919841297203

எஸ் சுகன்யா
( Tata Consultancy Services Limited)
Mailto: sukanya.s@tcs.com
Website: http://www.tcs.com


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Wednesday, April 19, 2006

அய்யோ..எம்புள்ளைய காணலைங்க....

3 வயது பெண் குழந்தை ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிடைத்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யாரென்று தெரியவில்லை.

யாருக்கேனும் இதோ இந்தக் கீழ்கண்ட குழந்தையின் பெற்றோர்களைப்பற்றிய தகவல் கிடைத்தாலோ அல்லது இந்தக்குழந்தை காணாமல் போனது பற்றியதான அறிவுப்புகள் எங்கேனும் கிடைத்தாலோ கீழ்கண்ட முகவரிக்கு உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இந்தக்குழந்தைக்கு 3 வயதே இருப்பதால் இந்தக்குழந்தையிடம் விசாரிக்க முடியவில்லை. இந்தக்குழந்தையைக் காணவில்லை என்ற எந்த புகாரும் வரவில்லை.

இதில் மனதை உருக்கும் விசயம் என்னவென்றால்
இந்தக்குழந்தை மொபைல் போனை எடுத்து தனது காதில் வைக்க முடியாமல் வைத்து "பாபா பாபா" ( அப்பா..அப்பா ) என்று அழுதுகொண்டிருக்கின்றது..

ஒருவேளை இந்தக்குழந்தையின் தயார் அடிக்கடி இந்தக்குழந்தையிடம் செல்போனை கொடுத்து அப்பாவிடம் பேச சொல்ல இது "பாபா.. பாபா.. "என்று செல்லமாக அழைத்து அந்தத் தந்தையின் மனம் குளிரச் செய்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது இந்தக்குழந்தையின் அழைப்பில் ஒரு சோகம்..ஒரு அழுகை.. புதிய புதிய முகங்களாக தன்னைச் சுற்றித் தென்படுகிறதே என்ற ஒரு பயத்தில் அழுதகொண்டிருக்கிறதாம்

இந்தக்குழந்தையைப் பற்றிய தகவலை தங்களால் முடிந்த அளவிற்கு சவுதி - ரியாத்தில் உள்ள தங்களது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்பி வையுங்களேன். யாரேனும் ஒருவருக்காவது தெரியாமலா இருக்கக் கூடும். ?

யாரேனும் இந்தக் குழந்தையை ஷாப்பிங் வரும்பொழுது பார்த்திருக்கலாம்

அந்தக்குழந்தையின் தந்தை கைகளில் வைத்து கொஞ்சும்போது ரசித்துவிட்டு சென்றிருக்கலாம்

யாரேனும் குழந்தையின் கன்னம் பிடித்து கிள்ளிவிட்டு சென்றிருக்கலாம்

அந்தக்குழந்தையோடு பெற்றோர்கள் சாலையைக் கடக்கும்பொழுது தங்களது காரை நிறுத்தி அந்தப் பெற்றோர்களுக்கு வழி விட்டிருக்கலாம்..

தயவுசெய்து இப்படி ஏதாவது ஒரு இருக்கலாம் என்ற விதிகளுக்குள் நீங்கள் உட்பட்டிருந்தால் இந்தக் குழந்தையைப்பற்றிய தகவல் தெரிந்தால்

Suwaiti-Al Saleh H.
SUWAITISH@SABIC.com

Saleh Al Suwaiti

Phone No : 00966 3 345 2747

என்ற முகவரிக்கு தகவல் தெரியுங்களேன். அந்தக்குழந்தையைக் காணாமல் அந்தப்பெற்றோர்கள் எந்த அளவிற்கு தவித்துப்போவார்கள்.

"அய்யோ எம்புள்ளைய காணலைங்க.. எம்புள்ளைய காணலைங்க.." என்று எங்கேயோ ஒரு தாயின் சோகக்குரல் எதிரொலித்துக் கொண்டே இருப்பது போலக் கேட்கிறது எனக்கு..

A 3 YEARS OLD GIRL FOUND IN RIYADH, KSA

DOES ANY ONE KNOW HER PARENTS?

IF YOU HEARD ABOUT PARENTS LOOKING OR ANYONE COMPLAINING ABOUT MISSING CHILD !!

PLEASE CONTACT ON BENEATH GIVEN ADDRESS

The above is story of a 3 years girl found in Riyadh, Saudi Arabia 2 month ago. Seems she got lost and no body so far report her missing. Due to her age they are unable to get any information of her family.
The sad story is that sometimes she put the mobile phone on her ear and keep crying and calling Baba Baba (Dade...dade)

I am forwarding this message to you with the hope that any single contact may play important role in the girl's destiny... As the range of this list varies across different countries (yours may as well) someone may happen to recognize the girl or may have heard about missing child...

Many thanks to all who will make their try.

Please contact:

Suwaiti-Al, Saleh H. [mailto: SUWAITISH@SABIC.com]

Saleh Al-Suwaiti

Phone ; 00966 3 345 2747.



அன்புடன்

ரசிகவ் ஞானியார்


Monday, April 17, 2006

அங்கிள் எனக்கு இதயம் கொடுங்க



அங்கிள்! அங்கிள்! என்னுடைய பெயர் இம்ரான் அலி - நான் உலகத்திற்கு வந்து 6 வருசம்தான் தான் ஆகுது..

அதுக்குள்ள நான் திரும்பி இறைவன்கிட்டேயே போய்ச் சேர்ந்திடுவோன்னு பயமா இருக்கு அங்கிள்.

எங்க அம்மாவும் அப்பாவும் எப்ப பார்த்தாலும் உம்முன்னு சோகமா இருக்காங்க.. உறவுக்காரங்க எல்லாரும் என்னய பாவமா பார்த்துட்டு பார்த்துட்டு போறாங்க.. எனக்கு என்னன்னு தெரியல..

டாக்டர் அங்கிள்தான் சொன்னாங்க எனக்கு இதயத்துல ஆபரேஷன் பண்ணணுமாம்..
எல்லாருக்கும் 6 வயசுல இதயத்துல ஆபரேஷன் பண்ணுவாங்களா அங்கிள்.. ?ஆபரேஷன் பண்ணலைன்னா நான் கடவுள்கிட்ட போயிருவேனாம்..

எங்கப்பாவால ஆபரேஷனுக்கு பணம் செலவழிக்க முடியாது அதனால் நீ செத்துப்போயிருவேன்னு பக்கத்து வீட்டு குண்டு முரளி - எதிர்வீட்டு கைசூப்பி பசீர் எல்லாம் சொல்றாங்க அங்கிள் ..
அப்படியா நான் கடவுள்கிட்ட போயிருவேனா அங்கிள்.. ?

[இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
எவனுமே அனாதை இல்லை
- பார்த்திபன்]

நீங்களெல்லாம் காசு கொடுத்தீங்கன்னா நான் பிழைச்சுக்குடுவேனாம்..
அங்கிள்! ப்ளீஸ்... ப்ளீஸ்... கொஞ்சம் காசு கொடுங்களேன்..

உங்க குழந்தைங்க மாதிரி நானும் பள்ளிக்கூடம் போகணும்..சறுக்கு விளையாட்டு விளையாடணும்..வீட்டுப்பாடம் எழுதணும்னு ஆசை ஆசையா இருக்கு அங்கிள்..

நானும் கொஞ்ச நாள் வாழ்ந்துட்டு போறேனே..ப்ளீஸ் காசு கொடுங்க அங்கிள்..

- இம்ரான் அலி



பெயர் - இம்ரான் அலி

நோயின் பெயர் : Atrial Septal Defect

ஆபரேஷன் நடைபெறும் மருத்துவமனை :
பகவான் மகாவீர் ஜெய்ன் இருதய சிகிச்சை மையம்
( Bhagwan Mahaveer Jain Heart Center )

மொத்தச் செலவு : 98,000 ரூபாய்

Cheque / DD :

Health Care Foundation,
A/c. Master Imran Ali .


அனுப்ப வேண்டிய முகவரி :


Women's Welfare Syndicate
8/2 Avenue Road,
Nungampakkam,
Chenni - 34
Ph : ( 009144 ) 42137401 / 28235324



[ வருமான வரி விலக்குக்கு உட்பட்டது ( 80 G ) ]



( தி இந்து நாளிதழில் 16.04.06 அன்று இதே விளம்பரம் வெளியிடப்பட்டது)



அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Sunday, April 16, 2006

நீங்கள் உதவினால் இவர்கள் வாழலாம்





வருடத்தில் ஒருநாள் உணவு வழங்கி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்யுங்கள்

கோயம்புத்தூர், சக்தி ரோடு , குரும்பபாளையத்தில் இயங்கி வருகிறது 'தி யுனைடைட் ஊனமுற்றோர் பள்ளி' ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களை கொண்டுள்ளது இந்த இல்லம்.

நீங்களும் உங்கள் பிறந்தநாள், பண்டிகைநாள், திருமணநாள், பெற்றோரின் நினைவு நாட்களில் அவர்களை நினைவு கூறும் விதமாக ஒருநாள் உணவு வழங்கி உதவி செய்யுங்கள். பொருள் உதவி செய்தோ அல்லது மாதாமாதம் ஒரு சிறு தொகையை பள்ளியின் பெயரில் வங்கி டிராப்ட் மணியார்டர் மூலம் அனுப்பலாம். இந்த இல்லத்தினை பார்வையிட்டும் உதவி செய்யலாம்.

ஒரு நாள் உணவிற்கான செலவு ரூ 2200 /-

The United Physically Handicapped School
( an institution for Orphaned disabled children)
96, Sathy Main road , Kurumbapalayam ,
Coimbatore - 641 107 , Tamilnadu
INDIA - Phone : 91 - 422- 2667578, 2667636
www.unitedhandicapped.org

[* Donations are Tax exempt ]





அன்புடன்

ரசிகவ் ஞானியார்

சோதனைக்காக

இங்கு தூவப்படும் விதைகள்
எங்கேயாவது மரமாகட்டும்

நிழல் கிடைப்பவர்கள் வாழ்த்துவார்கள்.


---

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
எவருமே அனாதையில்லை
- பார்த்திபன்


- ரசிகவ் ஞானியார்

நான் யார்?

நான் யார்?
கேள்வியே விடை தருகின்றது.


என்னுடைய அடையாளம் மனிதன்.
மனிதனின் மனிதத்தை
தேடுகின்ற முயற்சியில்
பயணப்படபோகின்றேன்.

என்னோடு கை கொடுங்கள்
எவருக்கேனும் வாழ்க்கை கொடுப்போம்.

நாமெல்லாம்
முதல் மனிதனின் வாரிசுகள்.
வாருங்கள்
மனிதத்தை விதைப்போம்.

-ரசிகவ் ஞானியார்

மனிதர்களாய் கூடுவோம்





உலகத்தில் சாதாரண மனிதர்களாய் எங்கோ ஒரு மூலையில் பிறந்து வளர்ந்து மரணப்பட்டுப் போகின்றோம். நம் மரணித்துடனையே நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் யாருக்கும் பயன்பெறாமலையே முடிந்துபோகின்றது. இப்படியொருவன் உலகத்தின் இந்த மூலையில் பிறந்து வளர்ந்ததே எவருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது.

நாம் மரணித்த உடனையே வெறும் பலகையில் தோற்றம் - மறைவு என்று எழுதி வைத்திருக்க வேண்டியதுதான். நாம் புதையுண்ட இடத்தை கடந்து செல்பவர்களுக்கோ அல்லது அந்த பலகையை காண்பவர்களுக்கோ நம்மை நினைத்து பார்த்துவிட்டு கடந்து சென்று விடுவர்.

யாருக்கும் பயன் பெறாமலையே வாழ்ந்து - மரணித்து போவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

எங்கோ ஒரு சாலையில் விதையை புதைத்துவிட்டுச் செல்பவன் தன் மரணித்த பிறகும் இளைப்பாற வருபவர்களுக்கெல்லாம் நிழல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான்.

சில விலங்குகள் கூட தான் இறந்து போன பிறகு மனிதனுக்கு தோல்களாகி பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. சில உயிரினங்கள் மரணித்தபிறகு உரமாகப் பயன்படுகின்றது. சில உயிரினங்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இப்படி மிருகங்களுக்கு கூட பயனுள்ள வாழ்க்கையாக அமைந்துவிடுகின்றது.

ஆனால் மனிதன் இறந்து போன பிறகு அதிக நேரம் பூமியில் வைத்திருந்தால் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுவான். அவனை எதற்கும் பயன்படுத்த முடியாது.

அவன் எங்கோ யாருக்கோ செய்கின்ற உதவிகள் - கருணைகள் அவனை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும்.

இறைவன் எல்லாரையும் பணம் உள்ளவர்களாக படைத்துவிட்டால் சமநிலையாக இருக்காது என்றுதான் ஏழைகளையும் படைத்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக பணம் உள்ளவர்களையும் படைத்துள்ளான்.

தங்களைப் போன்றவர்களின் சிறு உதவி ஒரு உயிரைக் காப்பாற்றலாம். உயிரைக்கொடுக்கும் பொறுப்பும் எடுக்கும் பொறுப்பும் இறைவனின் கைகளில் ஆனால் காப்பாற்றும் பொறுப்பை நமக்கு கொடுத்துள்ளான்.

ஊதுபத்தியாய் ஊருக்கு உழைத்தால்
மரணித்தப் பிறகும் மணத்தோடு வீசலாம்





என்றும் அன்புடன்

ரசிகவ் ஞானியார்